Rock Fort Times
Online News

திருச்சி, செம்பட்டு அருகே பழுதாகி நின்ற டிப்பர் லாரி மீது தனியார் பேருந்து மோதல்: 10 பயணிகள் காயம்…!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து திருச்சி நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளோடு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள செம்பட்டு அருகே பேருந்து வந்தபோது பழுதாகி நின்றிருந்த டிப்பர் லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மோதிய வேகத்தில் சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் பேருந்து இறங்கியது.

 

இதில், பேருந்தில் இருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்