Rock Fort Times
Online News

நாகர்கோவிலில் இன்று(ஏப்.15) பிரதமர் நரேந்திர மோடி ‘ரோடு ஷோ’…* சென்னையில் விஜய் பிரச்சாரம்…!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இன்றைய தினம் நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். ஏப்ரல் 21 மாலையுடன் தேர்தல் பரப்புரையை முடிக்க வேண்டும் என்பதால், பல கட்சித் தலைவர்களும், அக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர். அந்தவகையில், இன்று(15-04-2026) பிரதமர் நரேந்திர மோடி, அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து நாகர்கோவிலில் பிற்பகல் 3 மணிக்கு ‘ரோடு ஷோ’ நடத்துகிறார். சென்னை, தியாகராய நகர் தொகுதி, ஆயிரம் விளக்கு தொகுதி மற்றும் எழும்பூர் (தனி) தொகுதி ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் வாகனத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்