திருச்சி மாவட்டம், துறையூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையிலான போலீஸார் பச்சமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பச்சமலை வண்ணாடு ஊராட்சி, நாகூர் கிராமத்தில் கணேசன் மகன் காமராஜ் என்கிற கண்ணன் (37) அவரது தாத்தா பயன்படுத்திய ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கியை அரசு அனுமதியின்றி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதேபோல, பச்சமலையில் உப்பிலியபுரம் காவல் உதவி ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான போலீசார், டாப் செங்காட்டுப்பட்டியில் ரோந்து சென்றபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் சின்ராசு(30) என்பவர் சாராயம் விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அதோடு நாட்டுத் துப்பாக்கியும் வைத்திருந்தார். அதன்பேரில், அவரை கைது செய்த போலீசார் இரு பாட்டில்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராயம், அரசு அனுமதி இன்றி வைத்திருந்த ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கி, 300 கிராம் கருமருந்து, ஒரு செல்போன், ரூ. 1, 750 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Comments are closed.