திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை அன்னை நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை (70). தொழிலாளி. இவர் தெருவில் உள்ள குடிநீர் குழாய் அருகே கிடந்த மது பாட்டிலை எடுத்து அதில் உள்ள மதுவை குடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மயக்கமடைந்த அண்ணாதுரையை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .
இதுகுறித்து, அண்ணாதுரையின் மனைவி ஜெயா அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அண்ணாதுரையின் உறவினர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட மதுவை யாரோ குடிநீர் குழாய் அருகே போட்டு சென்றுள்ளார். அரசு மதுவைக் குடித்துதான் அண்ணாதுரை இறந்துள்ளார். எனவே, கள்ளச் சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு வழங்கியதுபோல, அண்ணாதுரைக்கும் தமிழக அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed.