துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை
விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பயணியை தனியாக அழைத்து சென்று சோதனை செய்ததில் அவர் 657 கிராம் எடை கொண்ட தங்கத்தை பேஸ்ட் வடிவில் உடலிலும், 95 கிராம் எடை கொண்ட தங்க செயினை பேண்டிலும் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.54 லட்சத்து 36 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார்.

Comments are closed.