ஊதிய திருத்தம் அறிவித்த பிரதமர், நிதி அமைச்சருக்கு நன்றி- வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்டி…!
வங்கி ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பண்ட்லீஸ் தலைமையிலும், சீனியர் துணை தலைவர் கிருபாகரன் முன்னிலையிலும் திருச்சியில் நடந்தது. இதில் மும்பையில் கையெழுத்தான வரலாற்று சிறப்பு மிக்க இரு தரப்பு ஊதிய ஒப்பந்தத்தின் சிறப்புகள், வங்கி வாடிக்கையாளர் நலன், வங்கியின் வளர்ச்சி, 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நிதிசார்ந்த ஊதிய உயர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பண்ட்லீஸ் நிருபர்களிடம் கூறுகையில், வழக்கமாக 3 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் ஊழியர் நலன், ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் பணி உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊதிய திருத்தம் குறித்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினர். இதற்காக அவர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் பணியாற்றுவது என்ற திட்டம் குறித்து இன்னும் எவ்வித முடிவையும் அரசு அறிவிக்கவில்லை. பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்பிஐ குறித்து சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஒன்றும் சொல்வதிற்கில்லை என்று தெரிவித்தார். பேட்டியின்போது வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் பாலாஜி, மத்திய குழு உறுப்பினர் கொ.தங்கமணி, பல்வேறு ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.