சின்னம், கொடி குறித்த தீர்ப்பு வெளியாகும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம்…!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி அணியினர் நீதிமன்றம் வாயிலாக சட்டப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற இரு அணியினரும் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இன்று(18-03-2024) தீர்ப்பளிக்க உள்ளது. நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். இன்று அதிகாலை கோவிலில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனம், அபிஷேகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.