மதுரையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. நமணசமுத்திரம் அருகே வந்தபோது தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார் ஒன்று பஸ்சை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கார், பஸ்ஸின் முன் சக்கர பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில், அந்த கார், பஸ்ஸின் அடியில் சிக்கிக் கொண்டது. இதில் கார் டிரைவர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டதால் ஜேசிபி எந்திரம் மூலமாக முதலில் பேருந்து அப்புறப்படுத்தி அதன் பின்னர் காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் பின்னர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பஸ்ஸில் பயணம் செய்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், காரில் வந்தவர்கள் தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள் என்பதும், விபத்தில் உயிரிழந்த டிரைவர் பெயர் சந்தோஷ் என்பதும் தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக , அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.