Rock Fort Times
Online News

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு...

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பஸ், ரயில், விமானம் மூலம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அன்னையை வழிபட்டு செல்வது வழக்கம். அதேபோல ஆண்டு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அதேபோல, இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் வழக்கம்போல இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணப்பாறை, தஞ்சை, கும்பகோணம், பூண்டி மாதாகோயிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டையில் வேளாங்கண்ணிக்கு பேருந்துகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வேளாங்கண்ணியில் இருந்தும் அந்தந்த ஊருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்