Rock Fort Times
Online News

மிசோரம் மாநிலத்தில் ரயில்வே பாலம் இடிந்து 17 பேர் பலி…!

மிசோரம் மாநிலத்தில் சாய்ரங் பகுதிக்கு அருகே ஐசாலிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 35 முதல் 40 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர் .  இந்நிலையில் இன்று ( 23.08.2023 ) புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர் . இடிபாடுகளில் சிக்கிய  அவா்களை  மீட்பு படையினர் மீட்டு உள்ளனர். மேலும் பலா் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு  மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்