Rock Fort Times
Online News

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் லட்ச லட்சமாக குவிந்த உண்டியல் காணிக்கை!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில், தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் புகழ் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் மற்றும் அயல்நாடுகளில் இருந்தும் வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனாக அழகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் கோவில் உண்டியல்களில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள்., பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை கோவில் நிர்வாகத்தால் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று (ஜூன் – 27 ) காணிக்கை எண்னும் பணி நடைபெற்றது. இதில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையர் சி. கல்யாணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அதன்படி, உண்டியல்களிலிருந்து ரூ.78 லட்சத்து 89 ஆயிரத்து 648 ரூபாய் பணமும், 2 கிலோ 75 கிராம் தங்கமும், 3 கிலோ 210 கிராம் வெள்ளியும், 140 வெளிநாட்டு பணத்தாள்களும், 854 வெளிநாட்டு நாணயங்களும் காணிக்கையாக கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

🔴ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் திருநாள் (டோலோத்சவம்) || 3ம் நாள் || சிறப்பு தொகுப்பு ||

1 of 901

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்