கடந்தாண்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற 10மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா, இந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்று வருகிறது. சென்னை, திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் விழாவில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டுமாணவ மாணவிகளுக்கு விருது மற்றும் ஊக்க தொகையை வழங்கி வருகிறார். விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கான பெற்றோர்கள் புகைப்படம் அடங்கிய பாஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பாஸ் வைத்திருக்கும் மாணவர்களுடன் அவரது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இவ்விழாவில் 750 விருதாளர்கள் உட்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்விழாவில் பங்கேற்க, முதற்கட்டமாக 21 மாவட்டங்களில் இருந்து வரும் மாணவ மாணவியர்கள் அழைத்து வர ஏற்கனவே, சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் என நியமிக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் முழு செலவில், அவர்களை அழைத்து வந்து மீண்டும் ஊருக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் திருவான்மியூர் தனியார் திருமண மண்டபத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு விஜய் மக்கள் இயக்கமாக நடத்திய கல்வி விருதுகள் விழா, இந்த ஆண்டு அக்கட்சியின் தலைவர் கலந்து கொள்ளும் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் அரசியல் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் அளித்து பேசிய நடிகர் விஜய்., ஒவ்வொருவரும் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும், தற்போது நிகழ்ந்து வரும் போதை கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார்.இது கல்வி விருது வழங்கும் விழா என்பதால்,இதை நான் அரசியல் மேடையாக்க விரும்பவில்லை. நாம் அனைவரும் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் எனக்கூறி மாணவர்கள் மற்றும்பெற்றோருடன் இணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அறுசுவை சைவ உணவு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.