திருச்சியில் மரக்கடை உரிமையாளரிடம் 7 பவுன் சங்கிலி பறித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அரியமங்கலம், காமராஜர் நகரை சேர்ந்தவர் இஸ்மாயில் (60). இவர் அந்த பகுதியில் மரக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி வீடு செல்ல முயன்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், இஸ்மாயில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றார். இச்சம்பவம் குறித்து இஸ்மாயில் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு, அதே பகுதியை சேர்ந்த நசிருதீன் ( 24 ) என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் இருந்து 7 பவுன் நகையும் மீட்டுள்ளனர். தொடர்ந்து, குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Comments are closed.