Rock Fort Times
Online News

திருச்சி தனியார் நிறுவனத்தில் ரூ.6.5 கோடி மோசடி- கணவன், மனைவி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு…!

திருச்சி தில்லைநகர் 5-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர்  எம். சுதாகர் (45).  இவர் தனது மனைவி மாலதி,  சகோதரர் ராஜேஷ், அவருடைய பள்ளி நண்பர் ஜான் பிரிட்டோ அமிர்தராஜ், அவரின் மனைவி மஞ்சு மார்கிரெட்  ஆகியோருடன் விளம்பர தொழில், விளம்பர பலகை, தொழில் நுட்ப பிரிண்டிங், டிசைனிங், வெப்சைட் தொழிலை திருச்சியில் தொடங்கினார்.  அவர்கள் அனைவரும்  கூட்டாக தொழில் செய்து வந்த நிலையில், ஜான் பிரிட்டோ அமிர்தராஜ் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஆகிய இருவரும் இன்னொரு பெயரில் புதிய நிறுவனத்தை சக பங்குதாரர்களுக்கு தெரியாமல் தொடங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து சுதாகர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் புகார் கொடுத்தார். அதில்  ஜான் பிரிட்டோ அமிர்தராஜ் மற்றும அவரது மனைவி ஆகியோர் கூட்டு சதி திட்டம் தீட்டி ரூ. 6.5 கோடி அளவுக்கு நிறுவன பணம் மற்றும் பொருள்களை கையாடல் மற்றும் மோசடி செய்துள்ளனர்.  ஆகவே, கோடிக்கணக்கில் மோசடி செய்த ஜான் பிரிட்டோ, மஞ்சு மற்றும் அவரது மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட அலுவலக ஊழியர்கள் ஜன்னத், கணேஷ், அஸ்கர், சதீஷ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.  அதன்பேரில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் ஜான் பிரிட்டோ அவரது மனைவி மஞ்சு மார்க் ரேட் மற்றும் பணியாளர்கள் உட்பட 6 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்