திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் சுப்பையா. இவரது மனைவி மீனாட்சி.
இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், பூட்டப்பட்டிருந்த அவர்களின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகளை திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டனர். பின்னர், வீடு திரும்பிய மீனாட்சி வீட்டில் நகைகள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.