Rock Fort Times
Online News

லால்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவி மீட்பு…!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் வர்ஷா. இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையை ஒட்டி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தாய்- தந்தையுடன் வயலுக்கு சென்றார். அங்கே கிணற்றின் ஓரமாக சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி 50 அடி ஆழ கிணற்றில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த முருகேசன் ஓடிவந்து மகளை காப்பாற்ற முயன்றார். ஆனால், மகளை மீட்டு மேலே கொண்டு வர முடியாததால், இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், புள்ளம்பாடி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நிலைய அலுவலர் போக்குவரத்து மகேந்திரன், சிறப்பு நிலைய அலுவலர் பாரதி, திராவிடன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு கட்டி கிணற்றில் இறங்கி கல்லூரி மாணவியை மீட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்