திருச்சி, உய்யக் கொண்டான் திருமலை ஸ்டோர் தோப்புரோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 23). இவர்கள் இருவரும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், பாக்கியலட்சுமியின் தாய் செல்வி அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்பொழுது பாக்கியலட்சுமி தனக்கு வயிற்று வலி இருப்பதாகவும், மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்துள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் நேற்று வயிற்று வலி அதிகமானதாக கூறி பாக்கியலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த பாக்கியலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து பாக்கியலட்சுமி யின் தாய் செல்வி திருவரங்கம் மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரில் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாக்கியலட்சுமி இறந்ததற்கான காரணம் என்ன? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.