திருச்சி,கொள்ளிடத்தில் கழிவுநீர் கலப்பு – நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சி.பி.எம்.கட்சி சாலை மறியல்
திருச்சி,ஸ்ரீரங்கம் செக்போஸ்டில் கட்டப்பட்டுள்ள கொள்ளிடம் தடுப்பனையில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி நம்பர் -1 டோல்கேட் செக்போஸ்ட் ரவுண்டானா அருகில் சிபிஎம் கட்சி மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சி.பி.எம் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாணவரணி மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் சந்தானம், அழகிரிபுரம் கிளை செயலாளர் முத்து ஆகியோர் பேசினர். புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு அருகில் உள்ள பெரிய பாறைகள் மற்றும் கற்களை அப்புறப்படுத்தி, அவ்விடத்தில் சிமென்ட் தளங்கள் அமைக்க வேண்டும். தடுப்பணைக்கு அருகே 30 அடி ஆழமுள்ள குளத்தில் 15 வயது மாணவன் ஷான் ரோஷன் இறந்த இடத்தை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும். அகால மரணம் அடைந்த சிறுவன் சாம் ரோஷனுக்கு உரிய நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இப்போராட்டத்தில் பகுதி குழு உறுப்பினர்கள் வீரமுத்து, கோவிந்தன், சுப்பிரமணியம், ரகுபதி, வெற்றிவேல், சீனிவாசன், சந்துரு, இளங்கோ மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
Comments are closed.