Rock Fort Times
Online News

வியாபாரிகளின் உரிமைக்காக எனது குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா வாக்கு சேகரிப்பு…

திருச்சி காந்தி மார்க்கெட்டில், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம், திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா, இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வியாபாரிகள் மத்தியில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் உங்களுக்காக, உங்களின் குரலாக, உங்களுக்கு ஆதரவாக எது எண்ணம் நிச்சயம் பிரதிபலிக்கும்.

வியாபாரிகளின் உரிமைக்காக போராடுவேன் வியாபாரிகளின் நலனுக்காக குரல் கொடுப்பேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அனைவரும் இரட்டை இலைக்கு ஆதரவளித்து, அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் எனக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தரைக்கடை வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ. சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர்கள் டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சி.கார்த்திகேயன், பகுதி கழகச் செயலாளர்கள் ரோஜர், சுரேஷ் குப்தா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்