Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அ.ம.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை…!

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108- வது பிறந்த நாளை யொட்டி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையில், அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் முன்னிலையில் பகுதி செயலாளர் வெங்கட்ரமணி ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், தனசிங், நெல்லை லட்சுமணன், சசிக்குமார், பகுதி செயலாளர்கள் கருப்பையா, கல்நாயக் சதீஷ்குமார், கதிரவன், உமாபதி, மதியழகன், சீனி ராஜ்குமார், பொன்மலை சங்கர், ஐடி விங் தருண், வக்கீல் பிரகாஷ், நாகூர் மீரான், கல்லணை குணா, நாகநாதர் சிவக்குமார், வேதாத்திரி நகர் பாலு, நாகவேணி செந்தில், தண்டபாணி, பெஸ்ட் பாபு, நல்லம்மாள், அகிலா, சாந்தா, மலைக்கோட்டை சங்கர், உறையூர் சாமிநாதன், துவாக்குடி நகரச் செயலாளர் ராஜா, கைலாஷ், ராகவேந்தர் மற்றும் பகுதி, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல பொன்மலைப்பட்டி, காந்தி மார்க்கெட் மரக்கடை, மணப்பாறை, வையம்பட்டி ஆகிய பகுதிகளில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்