Rock Fort Times
Online News

கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக…!

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின் தாக்கம் தற்போது வரை இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தோல்வி அடைந்து எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. குறிப்பாக, அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர் போட்டியிட்ட கொளத்தூர்
தொகுதியில் தோல்வி அடைந்தார். மு.க.ஸ்டாலினின் தோல்வியை ஏற்க முடியாத முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற பல திமுக நிர்வாகிகளும் கொளத்தூர் தொகுதி மக்களை மிக கடுமையாக விமர்சித்தனர். இந்த சூழலில், கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ்
பேசுகையில், கொளத்தூர் தொகுதி மக்களை பார்த்து நீங்கள் செய்தது நியாயமா? ஒரு நல்ல தலைவரை தோற்கடித்து விட்டீர்களே… பட்டு தெரிந்தால் தான் புத்தி வரும் என பேசினார். அப்போது அவர் நா தழுதழுத்து உடைந்து அழுதார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்க்கும் த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? என சத்யராஜை கிண்டல் அடித்து வருகின்றனர். சத்யராஜ் தீவிர திமுக ஆதரவாளர். விஜய் தனது அரசியலைத் தொடங்கியது முதலே அவரை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரும், அவரது மகள் திவ்யா சத்யராஜும் தீவிர திமுக ஆதரவாளர்களாக இருந்தபோதும், சத்யராஜின் மகனும், நடிகருமான சிபி விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்