கட்சியில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதது, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது உள்ளிட்ட சில காரணங்களால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக அண்ணாமலை முடிவெடுத்தார். இதற்காக டெல்லி சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து வழங்கினார். ஆனால், அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மறுபரிசீலனை செய்யுமாறு தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இருந்தாலும் தனது ராஜினாமா முடிவில் அண்ணாமலை உறுதியாக இருந்தார். அதனை தொடர்ந்து அவரது விலகல் கடிதம் ஏற்கப்பட்டதாக பா.ஜ.க.தேசியத் தலைமை இன்று (ஜூன் 5) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே அண்ணாமலை புது கட்சி தொடங்குவதாக பேச்சுகள் அடிபடுகின்றன. இதுதொடர்பாக அவர் இன்று மதியம் முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாக நேற்று தெரிவித்துள்ளார். இதனால் அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

Comments are closed.