திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி ஊராட்சியை சேர்ந்த எஸ்.ரமேஷ் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி வந்தார். லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட லீமாரோஸ் மார்ட்டின் வெற்றிக்கும் கடுமையாக உழைத்தார். அவர் வெற்றி பெற்றதும் அவரது வெற்றியைக் கொண்டாடும் வகையில் லால்குடி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து லால்குடி டோல்கேட், கீழவாளாடி, பச்சாம்பேட்டை வளைவு, மாந்துறை ஆகிய பகுதிகளில் கடந்த 07.05.2026 தேதி இரவு கட்சி நிர்வாகிகளுடன் விளம்பர பதாகை களை கட்டி முடித்துவிட்டு,தனது இருசக்கர வாகனத்தில் வாளாடி எஸ்.ஆர்.எம். மருத்துவமனை அருகே வந்த
போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த வாளாடி எஸ். ரமேஷ் இல்லத்திற்கு லீமாரோஸ் எம்எல்ஏ சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ரமேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அதிமுக லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் டி.என்.டி நடேசன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எம்.பாலன், வாளாடி கிளைக் கழக செயலாளர் செ.பிரபு, மா. சரவணன், செல்வம் மற்றும் ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் அமல்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.