திருச்சி திருவானைக்காவல் கருணாநிதி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் லண்டனில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்துமதி (வயது 50).
தங்கவேல் லண்டனுக்கு செல்வதற்கு முன்பு பல பேரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதனை அவர் திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் இந்துமதிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால், மனம் உடைந்த இந்துமதி, திருவானைக்காவல் கந்தன் நகர் பகுதியில் நேற்று இரவு சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1
of 850
Comments are closed, but trackbacks and pingbacks are open.