மணப்பாறை டி.என்.பி.எல் தொழிற்சாலையில் ஓயாத ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்…* பின்னணியில் என்னதான் நடக்கிறது..?
திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதிக்குட்பட்ட மொண்டிப்பட்டியில் தமிழக அரசுக்கு சொந்தமான காகித தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நிரந்தரமாக சுமார் 3500 பேரும், தற்காலிகமாக சுமார் 1200 பேரும் பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், நிரந்தர ஊழியர்களைப்போல தங்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை. நிர்வாகம் எங்களுக்கென வழங்கும் சம்பளத்திலும், கான்ட்ராக்டர்கள் பாதியை சுருட்டிக்கொள்கிறார்கள். ஆகவே எங்கள் வேலைக்கேற்ற சம்பளம் கைக்குக்கிடைப்பதில்லை, இது மட்டுமில்லாமல் நிர்வாகம் வழங்கும் சாப்பாட்டிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. தகுந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை. ஆகவே, இதையெல்லாம் தமிழக அரசு சரிசெய்து தரவேண்டும் என வலியுறுத்தி, மணப்பாறை காகித தொழிற்சாலை ஒப்பந்த ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து” இத்தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கதிரவன், போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தியதுடன், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஒப்பந்த ஊழியர்களிடையே வெளிப்படையான சமரச பேச்சு வார்த்தைக்கும் ஏற்பாடு செய்தார்.இதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து வேலைநிறுத்ப் போராட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில், இன்று ( அக்டோபர் 22 ) மீண்டும் மணப்பாறை டி.என்.பி.எல் தொழிற்சலையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் நேரடியாக சுமார் 1500க்கும் அதிகமான ஏழை, எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து விபரமறிந்த வட்டாரத்தினரிடம் நாம் பேசினோம்.அப்போது அவர்கள் தெரிவித்ததாவது.,” மணப்பாறை டி.என்.பி.எல் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை நியாயமானது. ஆனால், அது உடனே நடைமுறைக்கு வரவேண்டும் என எதிர்பார்ப்பதில் தான் இருதரப்பிற்கும் இடையே முரண்பாடு நிலவுகிறது. ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு முறையாக சம்பளம் தருவதில்லை எனக்குற்றம் சாட்டும் ஊழியர்கள், ஏற்கெனவே இருதரப்பிற்கும் இடையே நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்தையின்போது இதுபற்றி வாயே திறக்கவில்லை. மற்றபடி, ஊழியர்களின் நலன் சார்ந்த அத்தனை விஷயங்களும் அரசு சார்ந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன. தங்களின் உரிமைக்கா க போராடும் ஊழியர்களால் அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. ஒருவேளை இந்த போராட்டத்தையே காரணம் காட்டி உள்ளூர் தொழிலாளர்களுக்குப்பதில் வடமாநிலத்தவர்களுக்கு ஆலை நிர்வாகம் வாய்ப்பளித்தால் மணப்பாறையில் மிகப்பெரும் போராட்டம் உண்டாகும் சூழல் உருவாகும். ஒப்பந்த ஊழியர்களின் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில அரசியல் சக்திகள் பின்னணியில் இருந்து தங்களின் சித்துவிளையாட்டை காட்டுகின்றனர். இதில் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். ஆகவே ஒப்பந்த தொழிலாளர்களும்,காகித ஆலை நிர்வாகமும் இவ்விவகாரத்தில் தங்களுக்குள் மீண்டும் சமரசமாக கலந்து பேசி இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண முய வேண்டும்”என்றனர்.

Comments are closed.