திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்- வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…!
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டு அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருவழி பாதையாக மாற்றப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் சென்று வர சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த சாலையை தரைக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து பழக்கடை, கறிக்கடை, காய்கறி கடைகள் அமைத்து செயல்பட்டு வந்தனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை மற்றும் திருச்சி மாநகராட்சியிடம் புகார் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து இன்று(05-03-2024) திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ஹனிபா காலனியில் இருந்து ஜெயில் கார்னர் வரை சர்வீஸ் ரோடு சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினார்கள். அப்போது தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் கேகே நகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.