திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சித்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வையாபுரி (51). இவரது தங்கை காந்திமதி. இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள். காந்திமதி, கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் வையாபுரி, மணப்பாறை வட்டம் செட்டிசத்திரம் கிராமத்தில் 1,200 சதுர அடி கொண்ட காலி மனை ஒன்றினை ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்கை காந்திமதிக்கு வாங்கி கொடுத்துள்ளார்.இவர்கள் வாங்கிய காலி மனைக்குரிய பட்டாவுக்கு பெயர் மாற்றம் தொடர்பான ஆவணங்கள் ஆன்லைன் மூலமாக சம்பந்தப்பட்ட சித்தா நத்தம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்றுள்ளது.
அதன்பேரில், சமுத்திரம் விஏஓ கூடுதல் பொறுப்பு சித்தாநத்தம் விஏஓவாக உள்ள சிவ செல்வகுமார் (41) என்பவர் வையாபுரியை தொலைபேசியில் அழைத்து பட்டா பெயர் மாற்றத்திற்கு உண்டான ஆவணங்களை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.அதன்பேரில் வையாபுரி ஆவணங்களை எடுத்துக் கொண்டு சித்தாநத்தம் விஏஓ அலுவலகம் சென்று அங்கிருந்த விஏஓ சிவ செல்வகுமாரை சந்தித்து ஆவணங்களை கொடுத்துள்ளார்.அதனை சரிபார்த்த விஏஓ செல்வகுமார் தனக்கு தனியாக 2000 ரூபாய் கொடுத்தால் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு உடனடியாக பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார்.அதற்கு வையாபுரி தான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன் என்று கெஞ்சி கேட்டதால், ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத வையாபுரி, இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில், ரூ.1000 லஞ்ச பணத்தை விஏஓ சிவசெல்வகுமாரிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் , ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினர் சிவசெல்வகுமாரை கைது செய்தனர்.
1
of 840
Comments are closed, but trackbacks and pingbacks are open.