Rock Fort Times
Online News

திருச்சியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி..!

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் உள்ளன. இன்று(25-01-2024) மொழிப்போர் தியாகிகள் தினமாகும். இதனைஒட்டி,
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளர் ஜெ.இப்ராம்ஷா, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் அறிவழகன்,
புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அழகர்சாமி ஆகியோர் தலைமையில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் உழவர் சந்தை வழியாக சென்று தென்னூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தை அடைந்ததும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான
ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, முன்னாள் எம்.பி ரத்தினவேல், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், துணைச் செயலாளர் வனிதா, இளைஞர் அணி செயலாளர் சிந்தாமணி எல்.முத்துக்குமார், திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் எம்.எஸ். நஷிமா பாரிக், திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் தலைவர் K.P.S. கலியமூர்த்தி மாவட்ட துணைத் தலைவர்கள் P.தினகரன், K.K. கார்த்திக், B. சேதுமாதவன், மாவட்ட இணைச் செயலாளர்கள் R. செல்வக்குமார், R.வேல்முருகன்  P.ரஜினிகாந்த், மாவட்ட துணைச் செயலாளர்கள் T.K.S. ஹரிஹரன், M. மனோஜ்குமார், A.J. தினேஷ், B. தமிழ்வாணன், மாவட்டப் பொருளாளர் K.வணக்கம் சோமு, உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

work from home job போல அரசியல் ! நடிகர் விஜய்யை விமர்சனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்