கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா கிருஷ்ணன் (வயது 65). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் காளப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவராக (சுயேச்சை) இருந்தவர்.பின்னர்,திமுகவில் இணைந்த அவர், காளப்பட்டி பகுதி செயலாளராக பதவி வகித்தார்.பிறகு, திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்தார்.கடந்த 2016, 2021 சட்டமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், தோல்வியை தழுவினார்.அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை பொறுப்பாளரான பிறகு கட்சியில் அவருக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.இதனால், கடந்த
2 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியிலிருந்து விலகி இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் காளப்பட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பையா கிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து கோவில் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே அவர் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வந்ததாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
1
of 841
Comments are closed, but trackbacks and pingbacks are open.