இந்தப் பக்கம் விழுந்தா ஆறு… அந்த பக்கம் விழுந்தா ரோடு… திருச்சி கொள்ளிடம் பாலத்தில் தண்டால் எடுத்த வாலிபர்…!
இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள் மத்தியிலும் “ரீல்ஸ்” மோகம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் திருச்சி நம்பர்- 1 டோல்கேட் செல்லும் கொள்ளிடம் பாலத்தின் தடுப்புச் சுவரில் இளைஞர் ஒருவர் விறுவிறுவென ஏறி தண்டால் எடுக்க தொடங்கினார். அப்போது கொள்ளிடம் பாலத்தில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அவர் கை தவறி கீழே விழுந்தால் ரோட்டில் விழ வேண்டும், அல்லது அந்த பக்கம் உள்ள ஆற்றில் விழ வேண்டும். இதனைப் பார்த்து பதறிப்போன சிலர் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அந்த இளைஞரை கீழே இறங்கி வருமாறு கேட்டுக் கொண்டனர். சற்று நேரத்துக்கு பிறகு அவர் கீழே இறங்கி வந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த வாலிபர் ஒருவர் கொள்ளிடம் பாலத்தின் தடுப்பு சுவரில் மொபட் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டார். இதனை அவருடன் வந்த சக நண்பர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல, கொள்ளிடம் பாலத்தின் மேல் பகுதியில் இருந்து சிலர் தண்ணீரில் “டைவ்” அடித்து குளிப்பதை வீடியோ எடுத்து வருகின்றனர். தற்போது இளைஞர் ஒருவர் கொள்ளிடம் பாலத்தின் மேல் நடுப்பகுதி சிமெண்ட் தடுப்பில் ஆபத்தான முறையில் தண்டால் எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.