திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து ஜோசப் கல்லூரி வளாகத்தின் வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன . இதன் காரணமாக கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திற்கு உட்பட்ட விறகுபேட்டை மேல்நிலை நீர்தேக்க தொட்டி, மரக்கடை மற்றும் 17, 18, 19, 20, 21, 30, 31 ஆகிய வார்டு பகுதிகளில் 28.06.2024 ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. 29 ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என திருச்சி மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.