Rock Fort Times
Online News

திருச்சி மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான தனியார் பஸ்ஸில் அரசு டிக்கெட் வினியோகம்?…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி டிரான்ஸ்போர்ட் நிறுவன பஸ் பெரம்பலுார் முதல் துறையூர் வரை இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் பெரம்பலுார் மாவட்டம், நக்கசேலம் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் சம்பவத்தன்று நக்கசேலத்தில் இருந்து , பெரம்பலூருக்கு பயணித்தார். அப்போது, 17 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினார். டிக்கெட்டில் ஒரு பக்கத்தில் அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் என்றும், மறுபக்கத்தில் தனலட்சுமி டிரான்ஸ்போர்ட் என்றும் குறிப்பிட்டு நாள், பயண கட்டணம், பயணம் நேரம் உள்ளிட்டவை அச்சிடப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து
அதிர்ச்சியடைந்த அவர் அருகில் இருந்த சக பயணியிடம் கேட்டபோது, அனைவருக்கும் இதுபோன்றே டிக்கெட் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. உடனே அவர், டிக்கெட்டின் இரண்டு பக்கங்களையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே, அது வேகமாக பரவி வருகிறது. இது குறித்து
அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் பணிமனையில் பணியாற்றும் யாரோ ஒரு கண்டக்டர் அல்லது பணியாளர் டிக்கெட் ரோலை, குறைந்த விலைக்கு விற்பனை செய்திருக்கலாம் அல்லது எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான டிரான்ஸ்போர்ட் நிறுவனம் என்பதால் அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் பணிமனைக்கு டிக்கெட் அச்சடித்த இடத்தில் நேரடியாக இவர்களே இலவசமாக வாங்கி இருக்கலாம் என்று கூறினார்.
எது எப்படி இருந்தாலும் தனியார் பஸ்ஸில் அரசு போக்குவரத்து கழக டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்