அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலாக மது விற்பனை: நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் களத்தில் இறங்குவேன்- த.வெ.க. எம்எல்ஏ அதிரடி..!
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கார்த்திகேயன். இவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதேபோல போதைப் பொருட்கள் தடுப்பை உறுதிப்படுத்தவும் மதுரை மாநகர காவல் ஆணையரை நேரில் அணுகி மனு அளித்துள்ளார். அந்த மனுவில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி எனது மதுரை கிழக்கு தொகுதியில் டாஸ்மாக் பார்கள் இயங்கினால் அரசுக்கு எதிராக பொதுமக்களோடு இணைந்து போராடவும் தயங்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments are closed.