Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்- மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்…!

தமிழ்நாடு முழுவதும் இன்று(03-03-2024) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. அதேபோல திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 5, வார்டு எண் 27 தென்னூர் நடுநிலைப் பள்ளி மற்றும் தில்லை நகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கினார். அப்போது மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், நகர்நல அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியளர் ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர்கள் கமால்பாட்ஷா, விஜயலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர். இதேபோல திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 267 சிறப்பு மையங்கள் அமைக்கபட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 60,613 குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இப்பணியில் 1036 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு மருத்துவ மனைகள், மாநகராட்சி நகர் நல மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய பொது இடங்களில் இதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், சுற்றுலா பகுதிகள் ஆகிய இடங்களில் நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இது தவிர ரோட்டரி, லயன்ஸ் சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்