திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரமேஷ். சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்ட இவர், இன்று(மே 15) திடீரென ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நோயாளிகள் படுக்கை வசதி, மருத்துவமனை பராமரிப்பு போன்றவற்றை ஆய்வு செய்தார். ஊழியர்களிடம், மருத்துவர்கள் வருகை குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அவரிடம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ஐசியு வசதி மற்றும் வெண்டிலேட்டர் வசதி இல்லாததையும், 85 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளதாகவும், போதுமான மருத்துவர் வசதி இல்லாததையும் ஊழியர்கள் தெரிவித்தனர். அதற்கு அவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தை இடித்து கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Comments are closed.