Rock Fort Times
Online News

தமிழக அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்…அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு !

தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த 10ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு அமைச்சரவையில் 26 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை முடிவு செய்யப்பட்ட பிறகு துறைகளும் ஒதுக்கப்படும். அதன்பின்னர், புதிய அமைச்சர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்