Rock Fort Times
Online News

திருநள்ளாறில் உள்ள பிரபல கோவிலின் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு…!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலை சேர்ந்த நலபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோவில் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் உள்ள பஞ்சமுக வீர ஆஞ்சநேயரை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

 

இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதேபோல இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று( ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்க இருந்தது. அதற்கான கொடியேற்று விழா காலை 9 முதல் 10-30 மணிக்குள் நடைபெற இருந்தது. இதனை முன்னிட்டு கொடி மரத்துக்கு பூஜை நடைபெற்றது. அப்போது கொடிமரம் திடீரென முறிந்து விழுந்தது. இதனால், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் திட்டமிட்ட நேரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கப்படவில்லை. கோவில் நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கோவில் கொடிமரம் திடீரென முறிந்து விழுந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்