Rock Fort Times
Online News

திருச்சி பெண் ஊழியரிடம் ஐந்தரை பவுன் நகை பறிப்பு…!

திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ராஜேஸ்வரி ( 40). இவர், திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணி முடிந்து அன்று மாலை மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். கொண்டயம்பேட்டை பாலம் அருகில் சென்றபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்