அகில இந்திய கட்டுனர் சங்கம் திருச்சி மையம் மற்றும் அப்போலோ சிறப்பு மருத்துவமனை இணைந்து ஆரோக்கிய திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்…!
அகில இந்திய கட்டுனர் சங்கம் திருச்சி மையம் மற்றும் அப்போலோ சிறப்பு மருத்துவமனை இணைந்து, கட்டுனர் சங்கம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆரோக்கிய நலனை மேம்படுத்தும் நோக்குடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அங்கமாக கட்டுனர் மட்டும் அல்லாமல், அவர்களது குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் வழிவகை காணப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் பேர் முதல் 15 ஆயிரம் பேர் பயன்பெறுவர். இதுகுறித்து அப்போலோ சிறப்பு மருத்துவமனை கார்டியோலஜி மற்றும் எலெக்ட்ரோ பிசியோலஜி மருத்துவர் விஜயசேகர் கூறுகையில், “வருடத்திற்கு ஒருமுறை ஹெல்த் செக்-அப் செய்வதன் மூலம் இதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உடல் உறுப்புக்களின் செயல்பாடுகளை கண்டறிந்து, பிற்காலத்தில் வரும் பெரிய பாதிப்புகளை முன்கூட்டியே சரி செய்து கொள்ள முடியும் என கூறினார். மருத்துவமனை நரம்பியல் மருத்துவர் ஃபசல் தெரிவிக்கையில், இருதய செயலிழப்பு போன்றுதான் மூளை செயலிழப்பும். எனவே, வருடத்திற்கு ஒரு முறை மூளை மற்றும் மூளை நரம்பியல் சம்மந்தமான பரிசோதனை செய்வதன்மூலம் மூளை செயலிழப்பை தடுக்க முடியும் என குறிப்பிட்டார். மருத்துவமனை பொதுமேலாளர் ஜெயராமன் கூறுகையில், இந்த ஒப்பந்தம் கட்டுனர் சங்கம் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து வகையான சங்கங்களுக்கும் பயனளிக்கும் என தெரிவித்தார்.
Comments are closed.