Rock Fort Times
Online News

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி கைவிட்ட திருச்சி ஆயுதப்படை காவலர் மீது பெண் பரபரப்பு புகார்…! ( வீடியோ இணைப்பு)

புதுக்கோட்டை மாவட்டம், தெம்மாவூரை சேர்ந்தவர் பொற்செல்வி.  பி.எஸ்சி நர்சிங் படித்துள்ளார்.  இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரை சேர்ந்த சின்னத்தம்பி -ராணி தம்பதியின் மகனும்,  ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் பாலமுருகனுக்கும், திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் பணி காரணமாக பொற்செல்வி திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு தங்கி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.  அதேபோன்று பாலமுருகன் திருச்சி ஆயுதபடையில் பயிற்சி காவலராக பணிபுரிந்து கொண்டு காவலர் குடியிருப்பில் தங்கி உள்ளார். ஒரு நாள் பொற்செல்விக்கு போன் செய்த பாலமுருகன், தனக்கு உடம்பு சரி இல்லை என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில், காவலர் குடியிருப்புக்கு சென்ற பொற்செல்வி  அதிர்ச்சியடைந்தார்.அங்கு பாலமுருகனுக்கு உடல்நிலை எதுவும் பாதிக்கப்படவில்லை பொய்யாக அழைத்துள்ளது தெரியவந்தது.  அப்போது பாலமுருகன் நாம்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே என்று கூறி அந்த பெண்ணிடம் உறவு கொண்டதாக கூறப்படுகிறது. இதேபோல அவர் பலமுறை உறவு கொண்டதால் பொற்செல்வி கர்ப்பமடைந்தார். கர்ப்பம் குறித்து பாலமுருகனிடம் தெரிவித்தபோது திருமணத்திற்கு முன்பு நீ கர்ப்பமானது தெரிந்தால் எங்கள் பெற்றோருக்கு அவமானம் ஆகிவிடும். ஆகையால் கர்ப்பத்தை கலைத்துவிடு என கூறியுள்ளார். ஆரம்பத்தில் மறுத்த பொற்செல்வி குடும்ப நலன்கருதி கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

நாளடைவில் பாலமுருகன் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. 50 சவரன் நகை, கார் கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொற்செல்வி மற்றும் அவரது பெற்றோர் தங்களிடம் அவ்வளவு நகை, பணம் இல்லை என்று கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் வரதட்சணை கொடுத்தால்தான் திருமணம் என்ற நிலை உருவானதால் கடந்த ஜனவரி மாதம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், சம்பவம் நடைபெற்ற இடம் திருச்சி மாவட்டம் என்பதால் அங்கு சென்று புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில், திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தப்படாமல் ஒருதலை பட்சமாக பொற்செல்வியை மிரட்டி அவரிடம் உள்ள ஆதாரங்களை மகளிர் போலீசார் பிடுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாலமுருகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் அறிந்த பொற்செல்வி, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பம் அடையச் செய்த பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்க சென்றார். ஆனால் கலெக்டர் வெளியில் சென்று இருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்தார். பின்னர் இரவு 7 மணி அளவில் துணை ஆட்சியர் அதியமான் கவியரசிடம் புகார் அளித்து முறையிட்டார். அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்