காயிதே மில்லத் நினைவிடத்திற்கு சென்ற செல்வப் பெருந்தகைக்கு எதிராக கோஷம்…* திமுக-காங்கிரஸ் இடையே தள்ளுமுள்ளு!
காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர். தொடர்ந்து திமுக சார்பில் மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் சார்பில் மரியாதை செலுத்துவதற்காக அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை வந்திருந்த நிலையில் அவரை நோக்கி ‘துரோகி… துரோகி…’ என திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு, முள்ளும் ஏற்பட்டது..இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்தாமலேயே அங்கிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Comments are closed.