Rock Fort Times
Online News

திருவிடைமருதூர் சூரியனார் கோவில் ஆதீனம் கர்நாடகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் பக்தர்களிடையே பரபரப்பு…!

தஞ்சாவூர் மாவட்டம்,  திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கர்நாடக  மாநிலத்தைச் சேர்ந்த 47 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கும் தகவல் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான ஆதீனங்கள் இல்லறம் தவிர்த்து துறவறம் மேற்கொண்டவர்கள். இதுவரை துறவறம் மேற்கொண்டிருந்த சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க பரமாச்சாரிய சுவாமிகள் (54) தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் பிடரி பகுதியில் சைவ ஆதீனம் அமைப்பதற்கு உதவி புரிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ (47)என்பவரை அவர் சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.இது தொடர்பான பதிவு சான்றிதழ் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க பரமாச்சாரியார் கூறுகையில், கர்நாடகா மாநிலத்தில் சைவ மடம் இல்லை. அங்கு சைவ மடம் அமைக்க ஹேமாஸ்ரீ என்பவர் இடம் அளித்தார். அவரை அந்த மடத்தின் செயலாளராக நியமித்திருப்பதாகவும், அவரை பதிவு திருமணம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரு சில ஆதீனங்கள் திருமணம் செய்து கொண்டு ஆதீன கர்த்தர்களாக இருப்பதாகவும் தெரிவித்தார். சூரியனார் கோவில் ஆதினம் மடாதிபதியாக தான் நீடிப்பதாகவும், கர்நாடக மாநிலத்தில் சைவ மடத்தின் செயலாளராக தனது மனைவி இருப்பார் எனவும் தெரிவித்தார்.

🔴ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கைசிக ஏகாதசி 365 வஸ்த்திரங்கள் சாற்றப்படும் வைபவம்

1 of 939

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்