சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்தை பரபரப்புக்கு உள்ளாக்கிய சூட்கேஸ்…* திறந்து பார்த்த ரயில்வே போலீசார் அதிர்ச்சி!
சென்னை, பெரம்பூர் ரயில் நிலைய நான்காவது பிளாட்ஃபார்மில் சூட்கேஸ் ஒன்று சந்தேகத்திற்கிடமான விதத்தில் கிடந்தது. நீண்ட நேரம் அதே இடத்தில் சூட்கேஸ் கிடப்பதை பார்த்த ரயில்வே ஊழியர்கள் சந்தேகமடைந்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார்,
அந்த சூட்கேஸை கைப்பற்றி திறந்து பார்த்தபோது உள்ளே 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று ரத்த காயங்களுடன் திணிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக அந்த சூட்கேஸில் இருந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது முழுமையாக தெரியவில்லை.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி சாட்சிகளை வைத்து குற்றவாளியைப் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கைப்பற்றப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.