சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தர்மம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் பாலாஜி (வயது 18). இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டு ஒரு ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மன்னார்புரம் பி.என்.டி. காலனி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவக் குழுவினர் சோதனை செய்து பார்த்தபோது அவர் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. உடல்நல குறைவு காரணமாக அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.