Rock Fort Times
Online News

குடியிருப்பு பகுதியில் செயல்பட்ட வேதிப்பொருள் நிறுவனத்துக்கு ‘சீல்’ – திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை…

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 26 குமரன் நகர் சிவன் கோவில் தெரு குடியிருப்பு பகுதியில் மாநகராட்சியின் உரிமம் பெறாமல் ஹிந்துஸ்தான் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சோப்பு தயாரிக்க பயன்படும் திரவம், வேதிப்பொருட்களை மொத்தமாக வரவழைத்து அதனை தேவையான அளவு கண்டைனர்களில் அடைத்து கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தது. அந்த வேதிப்பொருட்களில் இருந்து அதிகளவு நெடி வருவதாகவும் இது அருகில் வசிப்பவர்களுக்கு நோயை உண்டு பண்ணுகிறது என்று திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டதன் பேரில், சுகாதார ஆய்வாளரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது குடியிருப்பு பகுதியில் அந்த நிறுவனம் செயல்பட்டது தெரிய வந்தது. அந்த நிறுவனத்தை வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ளுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்தினர் வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளாமல் அங்கேயே செயல்படுவதாக பொதுமக்கள் தரப்பில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது. பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில் குடியிருப்பு பகுதியில் செயல்பட்ட அந்த நிறுவனத்தை மூடி சீல் வைக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் நகர் நல அலுவலர் மணிவண்ணன் உத்தரவிட்டதன் பேரில் வட்டாட்சியர் ராஜவேல், வருவாய் ஆய்வாளர் அசோக், கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் மேற்படி நிறுவனத்தை மூடி சீல் வைத்தார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தெரிவிக்கையில், மாநகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்கள் நடத்துபவர்கள் மாநகராட்சி வணிக உரிமம் பெற்றே தொழில் நடத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்