வேஷ்டி-சேலை-வெடி பாக்ஸ்-ஸ்வீட்: ரூ.30 லட்சம் சொந்த பணத்தில் 3500 நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசுகள்…* மணப்பாறை த.வெ.க எம்.எல்.ஏ கதிரவன் தாராளம்…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் வெற்றி வாகை சூடி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ ஆர்.கதிரவன். கடந்த 2008 தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு உருவாக்கப்பட்ட மணப்பாறை தொகுதியில் இதற்கு முன்பு திமுக – அதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அந்த அளவிற்கு இருபெரும் திராவிட கட்சிகளின் கோட்டையென கருதப்பட்ட மணப்பாறை தொகுதியில், 33 வயது இளைஞரான கதிரவன் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றது அனைவரின் புருவத்தையும் உயர வைத்தது. திமுக மற்றும் அதிமுகவின் ஆள் பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றிற்கிடையே தொகுதி மக்கள் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க, த.வெ.க தலைவரும், தற்போதைய முதல்வருமான விஜயின் முகம் முக்கியமானதாக சொல்லப்பட்டாலும், தேர்தல் சமயத்தில் எம்.எல்.ஏ கதிரவனுக்கு ஆதரவாக, இரவு பகல் பார்க்காமல் தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் ஒரு பெரும் இளையோர் பட்டாளமே வேலை பார்த்தது. அதனால் தான் திமுக – அதிமுக என்கிற பலம்பொருந்திய கட்சிகளை வீழ்த்தி சட்டமன்ற உறுப்பினராக முடிந்தது.
இந்நிலையில் தேர்தல் சமயத்தில் தனது வெற்றிக்காக பாடுபட்ட கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பாராட்ட நினைத்த கதிரவன், மணப்பாறை தொகுதிக்குட்பட்ட சுமார் 3500 பேருக்கு தனது சொந்தபணம் ரூ.30 லட்சம் செலவில் தீபாவளி பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். மணப்பாறை தொகுதியில் மொத்தமுள்ள 346 பூத்களிலும் நிர்வாகிகளாக உள்ள ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் வேஷ்டி, சேலை, வெடி பாக்ஸ் மற்றும் ஸ்வீட் அடங்கிய தீபாவளி பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொண்டவர்கள் தற்போது எம்.எல்.ஏ கதிரவனை மனதார பாராட்டி வருகின்றனர். தேர்தல் சமயத்தில் வாய்க்கு வருகிற வாக்குறுதிகளை அள்ளி வீசியெறிந்து வெற்றி பெற்றுவிட்டு, பிறகு தனக்கென்ன என்று ஒதுங்கிக் கொள்ளாமல், தான் வெற்றிபெற்று எம்.எல்.ஏவானது முதல் தற்போதுவரையுள்ள ஆறுமாத காலத்தில்,தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து நிறைவேற்றித்தரும் த.வெ.க எம்.எல்.ஏ.வின் இந்த தீபாவளி பரிசு தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்களும் மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கதிரவனை வாழ்த்த நினைத்தால் இதுதான் அவரது செல்போன் எண் : 95003 54902.

Comments are closed.