Rock Fort Times
Online News

தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்…* ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை..!

தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டும் வருகிற 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு அவரவர் தங்களது சொந்த ஊர்களில் குடும்பத்தினரோடு பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு 26,139 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறுகையில், தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து 7427 சிறப்பு பேருந்துகள் உள்பட 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளை நவம்பர் 5 முதல் 7 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு செய்த பயணிகள் சென்னையில் 16 இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படும் என்பதை செயலி மூலம் அறியலாம். அதேபோல சென்னை தவிர பிற மாவட்டங்களில் இருந்து இதர மாவட்டங்களுக்கு செல்ல 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 26,139 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். பயணிகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்