Rock Fort Times
Online News

INTELLIGENCE KIND ATTENTION PLEASE: திருச்சியில் அப்பாவி வியாபாரிகளின் அடி வயிற்றில் அடித்து தீபாவளி வசூல்…- தஞ்சம் தேடி த.வெ.க.வந்த மாற்றுக்கட்சி கேடிகள் இருவர் அடாவடி!

தப்பு செய்ய மாட்டோம், தப்பு செய்றவங்களையும் சும்மா விட மாட்டோம் என்கிற கொள்கை முழக்கத்தோடு தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றார் சி.ஜோசப் விஜய். ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்து முழுமையாக 6 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில், தலைமையின் கறார் உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. மலைக்கோட்டை மாநகரில் தீபாவளியை நம்பி பிழைப்பு நடத்தும் அப்பாவி வியாபாரிகளின் அடிவயிற்றில் அடித்து கல்லாக்கட்டும் வேலை, மாற்றுக்கட்சியிலிருந்து த.வெ.க.விற்கு வந்த கேடி கரைவேஷ்டி கூட்டத்தால் சத்தமில்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒட்டுமொத்த ஒரிஜினல் தவெகவினர் அரண்டுபோய் கிடக்கிறார்கள்.

அதிமுக – திமுகவையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு சமீபத்தில் த.வெ.க.விற்கு வந்த மலைக்கோட்டை மாநகர இரண்டு மாஜி அதிமுக பிரமுகர்களின், பகல் கொள்ளை குறித்து களத்தில் இறங்கி விசாரித்தோம். அப்போது நமக்கு கிடைத்த தகவல் அனைத்தும் அக்மார்க் அதிர்ச்சி ரகம். அது இதுதான்., “ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது திருச்சி மாநகரின் பஜார்களான காந்தி மார்க்கெட், சிங்காரத்தோப்பு,பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏழை, எளியவர்கள் தரைக்கடை நடத்தி பிழைப்பு நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திருச்சி சிங்காரத்தோப்பு, டவுன்ஹால் பகுதியில் சுமார் 250 கடைகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த இடத்தையும் மேலிடத்தில் பேசி வாங்கிய முன்னாள் அதிமுக புள்ளி, ஒரு கடைக்கு ரூ.15,000 முதல் 25,000 வரை கல்லா கட்டுவதாக புகார் எழுந்துள்ளது. சொந்த கட்சிக்காரர்கள் கடை கேட்டால்கூட கையில் பணமிருந்தா நீட்டு, இல்ல உடனே நடைய கட்டு என கட் அண்ட் ரைட்டாக வசூல் செய்கிறார்களாம். அதேபோல, மாநகரின் முக்கிய இடங்களில் ஒலிபரப்பப்படும் விளம்பரங்கள்,
தரைக்கடைகளுக்கு மின்சாரம் வழங்குகிறேன் என்கிற பெயரில் வசூலிக்கப்படும் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம், தீபாவளி பட்டாசுக் கடைகளுக்கு லைசென்ஸ் வாங்கித் தருகிறேன் என்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முன்னாள் அதிமுக பிரமுகர்கள் இருவர் டீம், தீபாவளி வசூலில் இறங்கியுள்ளதாம். இதேபோல அதிமுகவிலிருந்து த.வெ.க.விற்கு தாவிய மற்றொரு மாஜி புள்ளியோ, மருதமலை படத்தில் ஏட்டையாவாக நடித்த வடிவேலு கேரக்டராகவே மாறி, கடை கடைக்கு நூறுக்கும், இருநூறுக்கும் காந்தி மார்க்கெட் தொடங்கி என்.எஸ்.பி ரோடு வரையுள்ள மொத்த இடத்திற்கும் தன்னுடைய அல்லக்கைகளை அனுப்பி வசூல் செய்கிறாராம். தீபாவளிக்கு தரைக்கடை போட்டு ஏதாவது சம்பாதித்து விட மாட்டோமா? என்கிற ஏக்கத்தோடு உழைக்கிற அப்பாவி வியாபாரிகள், வேதனையோடு தரும் அர்ப்ப பணத்தையும் வாரி சுருட்டி வருகிறதாம் மானங்கெட்ட அந்த இருவர் டீம். நேர்மையான மாற்றத்தை விரும்பி விஜய் ரசிகராக உழைத்த ஒரிஜினல் தவெகவினர் இதனை மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் விழி பிதுங்கி வருகின்றனராம். தீயசக்திக்கு எதிரான தூயசக்தி நாங்கள்தான் என ஆட்சி செய்துவரும் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.கவை, திருச்சியில் துர்நாற்ற சக்தியாக மாற்றுவதோடு, ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் இந்த புல்லுருவிகளை ஆரம்பத்திலேயே களையெடுக்க வேண்டும்.
மலைக்கோட்டை மாநகரத்தில் கொடி பிடித்து, போஸ்டர் ஒட்டி, அல்லும், பகலும் அயராது உழைக்கும் உண்மையான கட்சித்தொண்டர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே விசில் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்