திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றக் கழக மாநில துணைத்தலைவர் திருப்பூர் சங்கர் தலைமையில் சிலர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்துவதற்காக திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி கொண்டு கோஷங்கள் எழுப்பினர் . இதைப் பார்த்த கண்டோன்மெண்ட் போலீஸ்காரர் அரவிந்த் அந்த நபர்களை அமைதியாக வருமாறு கூறினார். இதனால், ஆத்திரமடைந்த சங்கர் மற்றும் அவருடன் வந்த 3 பேர் போலீஸ்காரரை திட்டி அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசில் அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் மதியழகன், சங்கர் மற்றும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
1
of 841
Comments are closed, but trackbacks and pingbacks are open.