Rock Fort Times
Online News

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஓட்டலை அடித்து நொறுக்கிய 6 பேர் கும்பல்…!

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் மீனாட்சிசுந்தரம் (47 )என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், கார்த்திக் என்பவர் அந்த ஓட்டலின் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தார். அப்போது தனது நண்பர் ஒருவருடன் வருவதாக கூறியிருந்த அவர் மேலும் 5 பேருடன் வந்து அறையில் தங்கி உள்ளார். இதனைக்கண்ட ஓட்டல் வரவேற்பாளர் சுகம், கார்த்திக்கிடம் 6 பேர் தங்க முடியாது. அறையை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவருக்கும், கார்த்திக் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் 6 பேர் கும்பல் அங்கிருந்த கம்ப்யூட்டர் மேஜை, நாற்காலி ஆகியவற்றை அடித்து நொறுக்கிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து போலீசில் மீனாட்சி சுந்தரம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்